கூட்டமைப்புக்கும் கூட்டணிக்கும் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை” – கஜேந்திரகுமார்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அணி என்றும் கூட்டமைப்பிற்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லை என்று கருது தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் மக்களின் உண்மையான நேர்மையான தலைமைத்துவமாக எங்களது தலைமைத்துவம் வந்து விடக் கூடாதென்பதற்காகவே இந்தப் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது புதிய கூட்டணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

அனைத்து தமிழ்க் கட்சிகள் என்று சொல்லக் கூடிய தரப்புக்கள் மட்டத்தில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக அந்த முயற்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கக் கூடிய தரப்புக்களும் ஈடுபட்டது. முண்ணயின் முக்கியமான பங்களிப்போடு 13 கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அந்த 13 இன் இறுதி வடிவம் நாங்கள் தான் தயாரித்தது என்றதையும் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையினால் அதனை நிராகரிக்க வேண்டுமென்று கேட்ட போது எங்களைத் தவிர அங்கு மற்ற ஐந்து தரப்புக்களும் அந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை தாங்கள் நிராகரிக்க முடியாது என்று கூறினார்கள். ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழை என்று சொல்லி இந்த புதிய கூட்டு முயற்சி என்ற பெயரில் நான்கோ ஐந்து நபர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிற இந்த தரப்பு கொள்கை ரீதியாக இன்றைக்கு இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் அதன் செயற்பாடுகளில் இருந்த எந்தவிதத்திலும் அவர்கள் வேறுபடப் போவதில்லை .

இந்த முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்ற சிவில் சமூகம் புத்திஜீவிகள் இந்த இனத்திற்கு தலைமை தாங்கக் கூடாது என்ற சிந்தனையில் பலரும் செயற்படுகின்றனர். ஏனென்றால்எங்கள்தரப்பினர்கள்நேர்மையானவர்கள்,அவர்களை ஏமாற்ற முடியாது என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்கிறதென்றால் தமிழ் மக்களை எவருமே தங்களின் தேவைக்காக பாவித்து நடுத்தெருவிற்குள் விட முடியாது என்பது தான் எங்களது நிலைப்பாடாக அமைகிறது.

ஆதனால் தமிழ் மக்கள் ஒரு புதிய தலைமைத்தவத்தை தேடிக் கொண்டிருக்கிற நிலைமையில் அந்த புதிய தலைமைத்துவம் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் முன்னணி இந்த பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறக் கூடாதென்பதற்காக எங்களிடம் வரக்கூடிய மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏதோ ஒரு வகையில் உடைப்பதற்கும் வாக்குப் பலத்தை குறைப்பதற்கும் எடுக்கின்ற ஒரு முயற்சியாகத் தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். இதை எல்லாத்தையும் தாண்டி தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று கருத்து வெளியிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.