கட்டைக்காடு கரவலை சம்மாட்டி மாருக்கும் மீன்பிடி திணைக்களத்திற்க்கும் இடையில் கட்டைக்காட்டில் சந்திப்பு….!

கட்டைக்காடு முள்ளியான் கரவலை சம்மாட்டி மாருக்கும் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு கட்டைக்காடு கடற்றொழில் கூட்டுறவு சங்க மண்டபத்தில் அதன் தலைவர் திரு விமலதாஸ் தலமையில் இரண்டு நிமிட இறை வணக்கத்துடன் ஆரம்பமானது. கரவலை தொழிலால் சிறி மீன்பிடியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிரப்பது எப்படி என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.     .இதில் யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் திரு சுதாகரன்.மீன்பிடி பரிசோதகர்களான திரு ராசேந்திரன் திரு சுதர்சன் திரு கரன் ஆகியோரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன் ஆகியோரும் கட்டைக்காடு முள்ளியான் கரவை சம்மாட்டிமார் சுமார் இருபதுபேர்வரை கலந்து கொண்டனர் இதில் கரவலையை காலை  6:00 மணிக்கு பின்னரே  சிறு மீன்பிடியாளர் நலன் கருதி வளைக்க வேண்டும் என்றும் .கரவலை எவ்வளவு தூரம் கடலுக்குள் செல்ல முடியும் என்பது தொடர்பில் பிறிதொருநாள் மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் தலமையில் கடலிற்க்குள் சென்று ஆய்வு செய்து முடிவு எடுக்கும் வரை கடலுக்குள் கரவலைக்கு செல்லக்கூடிய தூரம் 1.5 கடல் மைல் அதாவது 2700m அல்லது 21 கம்பான்கள் மட்டுமே பயன் படுத்துதல் என்றும் தீர்மானிக்கபட்டதுடன் காலை 6:00 மணிக்கு   முன்னர் கரவலை தொழிலில் ஈடுபட்டால்  அதனை சங்கம் உறுதிப்படுத்தும் பட்சத்தில் அன்றைய வருமானம் முழுவதையும் தேவாலயத்திற்கு வழங்குவது என்றும். என்றும் தீர்மானிக்கப்பட்டது.