கடலட்டை பிடிப்க்கும் தொழிலை அனுமதிப்பதில்லை என வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஏகமனதாக தீர்மானம்…!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக கடல் அட்டைப்பிடிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை, வெளியேறுமாறு கோரி,வடமராட்சி கிழக்க பிரதேச செயலர் மற்றும் பொது அமைப்புக்களால் கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் வடமராட்சி கிழக்கில் குறித்த தொழில் செய்ய தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தனி நபர் ஒருவர் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது வாழ்வாதார அல்லது வாழ்வதற்கான உரிமையை மீறப்பட்டுள்ளதாக கூறி பிரதேச செயலகத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையில், இது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளுக்கும்  இடையிலான கூட்டத்தில்   தமது பிரதேசத்தில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிப்பதில்லை என அனைத்து சங்கங்களும் ஏகமனதாகத் தீர்மானம் நிறை வேற்றியிருக்கின்றன.
 வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதி பிரதேச செயலாளர் திரு தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் பரிசோதகர் பொது அமைப்பு பிரதிநிதிகள்  ,  கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு சண்முகநாதன், வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது