12 கோழிக்காக சிறை!!!

 பன்னிரெண்டு கோழி திருடியவர், சிறையில் அடைக்கப்பட்டார், சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு!
தென்மராட்சி, எழுதுமட்டுவாழில் அழகுக்காக வளர்க்கப்பட்ட விலை உயர்ந்த, 87,000/= எண்பத்தேழாயிரம் ரூபா பெறுமதியான பன்னிரெண்டு கோழிகள் நேற்று முன்தினம்  (09) களவாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொடிகாம்ம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, திருடப்பட்ட கோழி மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரும் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதாகிய சந்தேகநபரை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார், குறித்த வழக்கை விசாரித்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், கோழிகளை உடமையாளரிரம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.