கிளிநொச்சியில் அதிகாலை கைது செய்யப்பட்ட 21 பேரும் விளக்க மறியல்

கிளிநொச்சியில் இராணுவ உயர் அதிகாரி உட்பட 21 பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட 21 பேரையே விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய (9) கைது செய்யப்பட்ட 21 பேரும் இன்று (10) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் புதையல் தோண்ட முற்பட்டமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.