யுத்தகாலத்தில் இழந்தவற்றை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தான் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டார்கள்.விஜயகலா எம்.பி….!

யுத்தகாலத்தில் இழந்தவற்றை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தான் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டார்கள் என முன்னைநாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழகத்தில் விசேட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியினை பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்து வைத்தபின் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    யுத்த காலத்தில் இழந்தவற்றை நாம் கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம் இப்பொழுது வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல்வேறுபட்ட விளையாட்டுக் கழகங்கள் பாடசாலைகளுக்கு  விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதான புனரமைப்பதற்கான நிதியினை வழங்கி இருக்கின்றோம்  இனிவரும் காலங்களிலும் அவ்வாறான உதவிகளை நாங்கள் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார். கடந்த நல்லாட்சி அரசின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ்2.7 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கலாநிதி விளையாட்டுக் கழகத்திற்கான கட்டிடத்தொகுதி நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.