வடமாகாண கூட்டுறவு திணைக்களம் சர்வதிகர நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் கடற்றொளிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் வே.தவசெல்வம்….!

வடமாகாண கூட்டுறவு திணைக்களம் சர்வதிகர நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் கடற்றொளிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் வே.தவசெல்வம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கூட்டுறவு திணைக்களம் சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவரும் வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் தற்போதைய வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவருமான வே.தவச்செல்வம் தெரிவித்துள்ளார்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கின்றபோது தமக்கு ஏற்ற வகையில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி  நிர்வாகங்களை நியமன அடிப்படையில் மாற்றி வருவதாகவும் குறிப்பாக வடமராட்சி கிழக்கு பலநோக்கு  கூட்டுறவு சங்கத்திற்கு பொருட்கள் கொள்வனவு செய்யும்  போது கூட்டுறவு நடைமுறையை மீறி  கூறு விலை பெற்றுக் கொள்ளாமல் பொருட்கள் கொள்வனவு செய்ய கூட்டுறவு திணைக்களம் அனுமதிப்பதாகவும், இது கூட்டுறவு விதிகளுக்கு முரணானதாகவும் கண்டிக்க தக்கது என்றும், கூட்டுறவு ஆணையாளர்  முன்னர் உள்ளூராட்சி மன்றம் ஒன்றில் ஆணையாளராக இருந்த போது  திறமையாக செயற்பட்டதாகவும் தற்போது சர்வாதிகாரமாக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை தமது வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு நியமன அடிப்படையில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்க பட்டமை தொடர்பில் பொதுச் சபைக்கு எந்த விதமான அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் இயக்குநர் சபையில் குறைபாடுகள் ஏடும் இருப்பின் முதலில் பொதுச்சபையை கூட்டி  அறிவித்திருக்க வேண்டும்.அவ்வாறு ஏதும் அறிவிக்க படவில்லை என பொதுச்சபை உறுப்பினர்கள் பலரும் தெரிவிப்பதுடன் சங்கத்தில் கடந்த காலத்தில் இடம் பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் இதுவரை எந்தவித விசாரணைகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்