கொரோனா வைரஸ் உயிரிழப்பு 425 ஆனது!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுதும் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,400ஐயும் கடந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாயன்று 64 பேர் கொரோனாவுக்குப் பலியானதாக ஹூபே மாகாணத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஹூபேயில் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2,345 பேர் கூடுதலாக இணைந்துள்ளனர்.
ஹூபே மாகாண தலைநகர் வுஹானில் ஒரு சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி விற்கப்பட்டது, இந்தச் சந்தையிலிருந்து கடந்த டிசம்பரில் இந்த வைரஸ் பரவி தற்போது உலகம் முழுதும் பரவி வருகிறது.
இப்போது சுமார் 20 நாடுகளுக்கும் மேலாக இந்த கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கித் தவித்து வருகிறது.
சீனாவுக்கு வெளியே ஒரேயொரு மரணம் கொரோனா வைரஸினால் நிகழ்ந்த நாடு பிலிப்பைன்ஸ் ஆகும். ஹொங்கொங்கிலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்தில் இதற்கு ஃப்ளூ வைரஸுக்கு எதிரான மருந்து மற்றும் எச்.ஐ.வி. மருந்துகளைக் கலந்து கொடுத்ததில் 48 மணி நேரங்களில் முன்னேற்றம் தெரிவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுவரை சீனாவுக்கு வெளியே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம் வருமாறு:
அவுஸ்திரேலியா: 12
கம்போடியா: 1
ஹொங்கொங்: 15
இந்தியா: 3
ஜப்பான்: 20
மக்காவ்: 8
மலேசியா: 8
நேபாளம்: 1
பிலிப்பைன்ஸ்: 2 (இறந்த சீன நபர் உட்பட)
சிங்கப்பூர்: 18
தென் கொரியா: 15
இலங்கை: 1
தைவான்: 10
தாய்லாந்து: 19
வியட்நாம்: 8
வட அமெரிக்கா பகுதி:
கனடா : 4
அமெரிக்கா: 11
ஐரோப்பா:
பிரிட்டன்: 2
பின்லாந்து: 1
பிரான்ஸ்: 6
ஜெர்மனி: 12
இத்தாலி: 2
ரஷ்யா: 2
ஸ்பெயின்: 1
ஸ்வீடன்: 1
மத்திய கிழக்கு:
ஐக்கிய அரபு அமீரகம்: 5