கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை 361ஆக உயர்வு…..!

கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக தினம் தினம் பலர் செத்து மடியும் கொடூரம் அரங்கேறி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸும் அதிக பேரை பலி வாங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது இன்னொரு பிளேக் போல உருவெடுக்கும்.
பிளேக் அளவிற்கு உயிர்களை வாங்கவில்லை என்றாலும் அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். கொரோனா வைரஸுக்கு இன்னும் முழுமையான மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது எங்கு உருவானது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது.
ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.மக்கள் யாரும் இதனால் பெரிய அளவில் இறக்க மாட்டார்கள் என்று சீன அரசு கருதியது. இதனால் சீன அரசு இதில் மெத்தனமாக இருந்தது. ஆனால் போக போக கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கியது.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. இந்த நோய் தாக்குதல் காரணமாக சீனாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதேபோல்தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது. நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக தினம் தினம் பலர் செத்து மடியும் கொடூரம் அரங்கேறி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 57 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்தமாக 17,205 பேர் சீனாவில் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மட்டும் புதிதாக 2300 பேர் மருத்துவமனையில் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தனியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு மருத்துவர்களுக்கு அதிக அளவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு அங்கு மருத்துவர்கள் இல்லை. இதனால் சீனாவின் பல பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் வுஹன் நோக்கி அழைத்து செல்லப்படுகிறார்கள்.