நல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள், அதிகார துஸ்பிரயோகம் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் உடனடி விசாரணைகளை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுநருமாகிய சாள்ஸ் அம்மையார் அவர்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு அனுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அதனை மட்டக்களப்பு அரசியல் வாதிகளின் தலையீடு காரணமாக அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மூடி மறைத்திருந்தார்.

இன்நிலை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில் தற்போதைய செங்கலடி பிரதேச செயலாளர் குறித்தே அதிகளவிலான குற்றச்சாட்டுகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அதி கூடிய மனித உரிமை குற்றச்சாட்டுகள் உள்ள அரச அதிகாரி!

இதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசாங்க அதிகாரியாக தற்போதைய செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் இருந்து வருவதாகவும் இவர் மீதே மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அதிகளவிலான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களை மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.