இலங்கையின் புதிய சூழலைத் தமிழ்த்தேசமாக எவ்வாறு எதிர்கொள்வது?: நல்லூரில் இன்று யாழில் இன்று கருத்தாய்வரங்கு.

இலங்கையின் புதிய சூழலைத் தமிழ்த்தேசமாக எவ்வாறு எதிர்கொள்வது?” எனும் தலைப்பிலான கருத்தாய்வரங்கு அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை-09.30 மணி முதல் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் பவன் விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளது.

அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் என். இன்பம் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா கலந்து கொண்டு கருத்துரையாற்றுவார். கருத்துரையைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

இதேவேளை, மேற்படி கருத்தாய்வரங்கில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.