இன்றைய ராசி பலன் 15/12/2019

மேஷம் : உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு பிரகாசமான பலனை தரும். உங்கள் ராசிக்கு இன்றைய நாள் மிகவும் உதவியாக இருக்கும். முயற்சி திருவினையாக்கும்.

ரிஷபம் : உங்கள் முயற்சி நல்ல பலனை கொடுக்கும். இன்று பயணங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. மன உளைச்சல் ஏற்படும். அதனை சமாளிகத்து அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு குறையாக இருப்பது போல தோன்றும்.

கடகம் : முடிவுகளை சற்று பொறுமையாக எடுங்கள். விரைவாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

சிம்மம் : கவனமுடன் செயல்பட்டால் இன்று உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இன்று பாடல் கேட்பது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

கன்னி : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சு மற்றவர்களை வெகுவாக கவரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் : இன்று உங்கள் புத்திசாலித்தனம் இந்த நாளை ஆக்கபூர்வமாக மாற்றும். திட்டமிட்டு இலக்குகளை அடைய முயற்சி மேற்கொள்வீர்கள். இன்று பயனுள்ள நாள்.

விருச்சிகம் : சவால்கள் நிறைந்த நாள். எதனையும் லேசாக எடுத்து கொண்டு சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள்.

தனுஷ் : இன்று மகிழ்ச்சியான நாளாக அமையாது. மனதில் குழப்பம் உண்டாகும். அதனால் வளர்ச்சி பாதிக்கப்படும். சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அல்லது முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம் : இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள். உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதனை முயற்ச்சித்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முயற்சிகள் பலன் தரும்.

கும்பம் : வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

மீனம் : உங்கள் முயற்சிகள் சிறந்த பலனை அளிக்காது. அசௌகரியமாக உணர்வீர்கள். தியானம் பிரார்த்தனை மேற்கொள்வது நல்லது.