மண்வாசனை அமைப்பு அறுபது மாற்று திறனாளிகளுக்கு உலர் உணவு வழங்கியது….!

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட 60 மாற்றுத்திறனாளிகளுக்கு. மண்வாசனை அமைப்பினரின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன…இன் நிகழ்வுக்கான முழு அனுசரணையினை கனடா மண்வாசனை அமைப்பு மேற்கொண்டது..மேற்படி நிகழ்வுக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டு மிகச்சிறப்பாக கூட்டுறவு சங்க  மண்டபத்தில் நிகழ்வு நடை பெற்றது ..நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக பலர் கருத்துரையாற்றினர்