பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள். இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..! கிளிநொச்சி- பளையில் கோர சம்பவம்..!

கிளிநொச்சி பளை- கரந்தாய் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.பளை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.