பருத்தித்துறை பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்….!

பருத்தித்துறை பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப் பட்டுள்ளது.இன்றைய தினம் காலை 9 மணிக்கு தவிசாளர் அ.ச.ஆரியகுமார் தலைமையில் இறை வணகஙத்துடன் ஆரம்பித்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்கான விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எட்டு உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் நான்கு பேரும், தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் இரண்டு பேரும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும், சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் இருவரும், பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் ஒருவருமாக மொத்தம் 18 வாக்குகளும் எதிராக ஈபிடீபி உறுப்பினர் ஒருவர் வாக்களித்திருந்தார்.இரண்டு ஈபிடீபி உறுப்பினர்கள் அமர்வில் பங்குபற்றவில்லை.

இன்று காலை ஆரம்பமான அமர்வில் பாதீடு தொடர்பான விவாதம் சபை உறுப்பினர்களின் பலத்த வாத பிரதி வாதங்களும்கு மத்தியில் இடம் பெற்றவேளை தவிசாளரால் பாதீட்டை அங்கீகரிக்குமாறு கோரப்பட்டது.இதன் போது உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரப்பட்டதை தொடர்ந்து வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இந் நிலையிலேயே 18 மேலதிக வாக்குகளால் நிறைவெற்றப்பட்டது.யாழ்ப்பாணம்