இன்றைய ராசி பலன் 13/12/2029 வெள்ளிக்கிழமை ….!

மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைச் செய்யும் நாளாக செல்லும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சந்திப்புகளும் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் நல்ல நாள் ஆகும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். தம்பி தங்கைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் இவைகளில் நிதானமாக இருக்கவும். உங்கள் வார்த்தை உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்பதால் பேச்சுவார்த்தையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மற்றபடி கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு ஆதாயம் நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக மேம்படும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும், புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சாத்தியக்கூறு உள்ள நல்ல நாள் ஆகும். ஒரு சிலர் பிரயாணத்தை பற்றிச் சிந்திப்பீர்கள். இவைகளில் வெற்றியும் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போனாலும், உத்தியோகத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். ஒரு சிலருக்கு வீண் அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பிரயாணங்களுக்கு முன்பு சிந்திப்பது நல்லது. அல்சர் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்களும், மூட்டுவலி தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களும், மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி, குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் மொத்தத்தில் அமைதியான நாளாகவே இந்த நாள் அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உருவாக அடித்தளம் அமைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகம். ஆனாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் எதிர்பாலினர் மீது தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும். பிரிந்த குடும்பங்கள் பிரிவினையை நோக்கிச் சென்ற குடும்பங்கள் தங்களுடைய எண்ணங்கள் ஈடேறப் பெறுவார்கள். மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். திடீரென உணர்ச்சிவசப்படக்கூடிய பல சூழ்நிலைகள் உத்தியோகத்திலும், குடும்பத்திலும் ஏற்படும் என்பதால் இவைகளில் கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக் கொள்ளவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இறுதியில் நன்மையிலேயே முடியும். கணவன் மனைவி உறவில் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை மேம்படும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு கூடுதலாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். உயர்கல்வியில் இருப்பவர்கள் சற்று சிரமப்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் வீண் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் என்பதால் இவைகளில் கவனம் தேவை.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி அடைவார்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறைய வாய்ப்பு உள்ளது. மனைவியுடன் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், மொத்தத்தில் குடும்ப அமைதி பாதிக்கப்படாது ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாக வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். ஒரு சிலர் இடமாற்றத்திற்கான முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இவைகளில் வெற்றியும் பெறுவார்கள். விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு வலுவாக உள்ளது. மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். இருப்பினும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது உங்கள் கல்வியை நல்லதொரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். புது தொழில் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும் என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களையும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் கூட்டுத் தொழில் போன்றவற்றை துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல முடிவுகளை எட்டும் சிறப்பான நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் குழந்தைகளால் கல்விச் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் மனமகிழ்ச்சியை கிடைக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு. கணவர் உங்களை புரிந்து கொள்ளும் மன நிலைக்கு வந்து விடுவார்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற அடிப்படையான செயல்கள் என்று துவங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். வயதானவர்களுக்கு கண்கள் தொடர்பான அல்லது கால்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து தாய் நாடு திரும்ப முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நன்மையான நாள் ஆகும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு இனிமையான நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் கல்வி மேம்படும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். தங்களின் எதிர்பார்ப்பின் படி வேலை மாற்றத்திற்கான சுமூகமான சூழல் இன்று நடைபெறும். பெண்களுக்கு ஏற்ற மிகு நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய மொபைல் போன் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சோஷியல் மீடியா போன்றவற்றில் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு என்பதால் நேரத்தை சிக்கனப்படுத்தும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் இருப்பார்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு கொண்டிருந்த காரியங்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பத்திரிக்கை துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்கள் வேலைப்பழு சற்று கூடுதல் ஆனாலும் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். சுபச்செலவுகள் உங்களை தேடி வரும். பொருளாதாரத்தில் அவ்வப்போது பற்றாக்குறை ஏற்பட்டாலும், திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். கலைத்துறை பத்திரிக்கை துறை எழுத்துத் துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு ஏற்ற மிகு நாள் ஆகும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனநிம்மதி பெறுவார்கள். தங்கள் வேலையில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றி கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. குடும்பத்திலுள்ள மூத்தவர்களுக்கு இடுப்பு மற்றும் கால் வலி ஏற்பட்டு விலகும். நீதித்துறை கட்டிடத் துறை பொறியியல் துறைகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலைப்பழு சற்று கூடுதலாக கொடுக்கும் என்றாலும் வெற்றியான நாளாகவே இந்த நாள் அமையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களுக்கு தனவரவு டன் கூடிய லாபகரமான நாளாகவே இன்றைய நாள் அமைகிறது. எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். வெளிநாடுகளில் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வு உண்டாக வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிதாக உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் நாள். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்களுக்கு தங்கள் எண்ணங்கள் நிறைவேற காண்பார்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் வெற்றியடைவார்கள். உங்கள் திருமணத்தை பற்றி பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. இருப்பினும், மன நிம்மதி அடைவீர்கள். உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் சற்று கூடுதல் கவனம் தேவை. கல்விக்காக ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் ஏற்படலாம். மொத்தத்தில் முன்னேற்றமான நாள் ஆகும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் தசா புத்திகள் மட்டும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தொடும் அத்தனை விஷயங்களும் வெற்றி அடைவதாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் திருமணத்திற்காக திருமணம் தாமதப்படுத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு வெற்றிகரமான திருமண சம்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான நாளில் இருக்கிறார்கள் உங்களுடைய கடின முயற்சிக்கு அங்கீகாரமும் நிர்வாகத்தில் நல்ல பெயரையும் பெறுவீர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கை கொண்டவராக இருப்பீர்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வுக்கான அடித்தளம் அமையும் நாளாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் உணவு பொருள் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சுற்றுலா துறை போன்றவற்றில் உள்ளவர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவார்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலைமை இருக்கும்
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களால் உதவி உண்டாக வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களின் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஒரு சிலர் வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகளில் இறங்குவார்கள். அதற்காக கடன்பட வேண்டியதும் வரலாம். மாணவர்களின் கல்வி மேன்மை அடையும். மருத்துவக்கல்வி பொறியியல் கல்விக்காக வெளிநாடு சென்று படித்து வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். இவைகளில் வெற்றியும், நண்பர்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அவை மேலும் தீவிரமடைந்து வரும். பிரச்சனைகளும் அதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை. திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது என்றாலும் நன்மையே கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன் வந்து நிற்க வாய்ப்பு உண்டு.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். இருப்பினும், சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தாமதப்படுத்தி செய்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும், வீண் அலைச்சல்களும் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் இவர்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு முடிவினை எட்டுவதற்கு சற்று காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். வயதானவர்களுக்கு கால் மற்றும் செரிமானத்தில் தொந்தரவுகள் வர வாய்ப்பு உண்டு என்றாலும் முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று வெற்றியடைவீர்கள். வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். பொருளாதாரத்தில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள். ஊதிய உயர்வு எடுத்து எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கல்வியில் இருப்பவர்கள் சற்று கூடுதலான கவனத்தை செலுத்த வேண்டி வரும். உயர் கல்வியில் இருப்பவர்களுக்கு உங்கள் வழிகாட்டிகள் உடன் இணைந்து செயலாற்றுவதில் பிரச்சினைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்கவும்.