வடமாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் நியமனம்?

வட மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிப்பது குறித்து அரசாங்க உயர்மட்டத்தில் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
தற்பொழுது திருமதி சார்ள்ஸ் சுகாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகின்றார்.இந்நிலையில் அவரை வட மாகாண ஆளுநராக நியமித்து அமைச்சுக்கு வேறோரு செயலாளரை நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.