மனித உரிமை தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்ணீர்மல்க போராட்டம் யாழில் இடம் பெற்றது….!

மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இணைந்து யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.சுமார் 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இராணுவத்திடம் ஒப்படைத்த உறவுகளுக்கு இராணுவமே வெளியேறு எமது காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் சொல், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய் உள்நாட்டு விசாரணை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும், ஐநா மனித உரிமை ஆணையாளரே இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல், இனப்படுகொலை மேற் கொண்டவர்கள் போர்க்குற்றங்களை புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கு, உட்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். காலை 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு முன் இடம் பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்திற்க்கு மதகுருமார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலர் செல்வராசா கஜேந்திரன் மகளிர் விவகார பொறுல்பாளர் திருமதி வாசுகி சுதாகரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு செயற்பாட்டாளர் திருமதி கிருபா ஆகியோரும் காணாமல் ஆக்கப்படவட உறவுகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.கவன ஈர்ப்பு போராட்டத்தொல் ஈடுபட்ட ர்களால் ஐநா மனித உரிமைகள் நாயகத்திற்க்கான மகஜர் ஒன்றினை யாழ் பிராந்திய மனித உரிமைகள் பணிமனை ஊடாக அதன் அதிகாரிகளிடம் கையளித்தனர் அந்த அறிக்கை விபரம் வருமாறு

மகஜர்

அதிமேதகு மிசேலா பஸ்லெற் யெறியா ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளார்

அன்புடையீர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை தொடர்பானது.

இன்று டிசம்பர்  10 சர்வதேச மனித உரிமைகள்  தினத்தில்  தங்களிற்க்கு இந்த மகஜரை சமர்ப்பிக்கின்றோம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நீதி கிடைக்காது  ஏங்கும் எமது மன வேதனையையும், ஆதங்கத்தையும் தங்களது மேலான கவனத்திற்குக்  கொண்டுவருகினறோம்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட  இனவழிப்பு யுத்தத்தின் போது அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்படட்வர்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை  யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் வெளிப்படுத்தப் படவில்லை. மேற்படி விடயத்தில் நீதிக்கான செயன் முறைகளில் முன்னேற்றம் இல்லாமலிருப்பது தொடர்பில் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

2009 இல் சிறீலங்கா அரசு இனவழிப்பு ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பினன்ர்  ஐ.நா செயலாளர் நாயகம் பான்கி மூன் அவர்கள் மூவர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தார். போரின் போது கடைப்பிடிக வேணடிய சரவ்தேச சட்டத்தின் அனைத்து பரிமாணங்களையும், இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் மீறியுள்ளதாக அந் நிபுணர்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

அதனைத் தொடர்ந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவை பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியது. மார்ச் 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை ஒன்று மேற்கொளள்ப்பட்டு அவ் அறிக்கையானது சரவ்தேச நீதிபதிகள் வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்களை உளள்டக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேணடும் என வலியுறுத்தியது. 2015 இல் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும்

ஆட்சியில் ஏறிய பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் 30/1 இலங்கை அரசாங்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

அதன் பினன்ர் இலங்கை அரசாங்கம் மீளிணக்கம் சம்பந்தமாக ஓர் கலந்தாய்வு செயலணியை கண்  துடைப்பிற்காக உருவாக்கியது. குறிப்பாக பரிந்துரைகள் ஓர் கலப்பு பொறிமுறை உருவாகக்த்தை வழிமொழிந்தது. எனினும் இவ்வறிக்கையானது அரசாங்கத்தினால் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாககும் செயன்முறைகளில் அவை முற்றாகப் புறமொதுக்கப்பட்டது.

காணாமல்  போனோர் அலுவலகம்

2016 இல் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் திறக்கப்படட்து. அவ்வலுவலகம் 2018 இல் இருந்தே அமுலுக்கு வந்தது. 2018 இல் ஆணையாளார்கள் நியமிக்கப்பட்டார்கள். இவை வெறும் கண்துடைப்பிற்காகவே மேற்கொளள் ப்பட்டது. காணாமல் போனோர் அலுவலகம் பல. வழிகளில் காணாமலாக்கப்படட் தமிழ்  உறவு களுக்கு ஏமாற்றத்தையே  தந்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்து ஆட்கொணர்வு மனுக்களில் பிரதிவாதிகளுக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சார்பாக அவர்களை பாதுகாககும் வகையில் தோன்றிவருகிறது. ஒடடு மொத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கபப்ட்டவர்களது உறவினர்களை அரசு ஏமாற்றிவருகிறது. காணாமல் போனோர்களுக்கான அலுவலகம்(OMP) அமைச்சரவையின் முழுமையான கடடுப்பாட்டில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அது சுயாதீனமற்றதாகவும் காணப்படுகினற்து.

தீர்மானம் 30/1 இல் உறுதிமொழி வழங்கப்பட்டவாறு வெளிநாட்டு வழக்கு தொடுநர்களை, நீதிபதிகளை நியமிக்க மாட்டோம் என முன்னாள்  சனாதிபதியும், பிரதமரும் எதிர்க்ககட்சித் தலைவரும் தொடர்ந்து தெரிவித்து வந்துளள்னர.இந்த நிலைப்பாட்டில்தான்  தற்போதும் கௌரவ ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்களும்  சிங்கள பௌத்த பேரினவாதமும் உள்ளனர் எனவே மேற்படி காரணங்களைச் சுட்டிக்காட்டி  சிறீலங்கா அரசுக்கு இனிமேலிம்  கால அவகாசம் வழங்க வேணட்டாம் எனவும், முழுமையான சர்வதேச பக்கச்  சார்பற்ற விசாரணைககு பரிந்துரை செய்யுமாறும் கடந்த ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் வடககு கிழக்கைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புக்கள் மற்றும் ஏனைய ஒத்தகருத்துள்ள அமைப்புக்கள் மற்றும் நபர்களினால் இலங்கையில் நிலவிய சூழல் தொடர்பாகவும் சமாதானம் நீதி தொடர்பிலான செயன்முறைகளில் முன்னேற்றம் இல்லாமலிருப்பது தொடர்பிலும் கடிதம் ஒன்றும் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படட்து. அக்கடித்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து இனிவரும் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் 2019 கூட்டத் தொடரில் நீங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையில் உள்ளடககுவீர்கள் எனும் எதிர்பார்பில் அக்கடிதம் தங்கள் மீது நம்பிக்கை கொண்டு அனுப்பி வைக்கப்படட் து.

எனினும் எமது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக எமது கோரிக்கைகள் புறக்கணிகக்ப்பட்டு சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமையானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான அரச உயர் மட்டத் தலைவர்களும், இராணுவ உயரதிகாரிகளும் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது. இதனால் காணாமல் ஆக்கப்படட்வர்களின் உறவினர்களாகிய எமக்கும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அதிமேன்மை தங்கிய தாங்கள் பினவரும் நிகழ்ச்சி சார் தலையீடுகளை ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிற்கு முன்மொழிய வேணடும் என எதிர்பார்க்கின்றோம்.

1.சமர்பப்பிக்கும் அறிக்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் சாத்தியப்படுத்த அவசியமான அரசியல் விருப்பு இலங்கை அரசிடம் இல்லை என்பதனால் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் இனிவரும் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தினை உடனடியாக முடிவுக்குக் கொணடுவர வேணடுமென தாங்கள் முன்மொழிய வேணடுமெனவும்,

2. இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சரவ் தேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நதிமன்றம் ஊடாக மேற்கொளள் வேணடுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய தாங்கள் வலியுறுத்த வேணடுமெனவும்

3. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான ஐ.நா குழு இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேணடுமென ஐ.நா செயலாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்க வேணடுமெனவும்.

4. அ) இலங்கைக்கான விசேட ஜ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும்,

ஆ- வடக்கு – கிழக்கில் நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேமப்டுத்தவும், உறுதுணையாகவும் இருகக் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவவேணடும் எனவும் மீளவும் வலியுறுத்துகின்றோம்.

நன்றி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

10. மார்கழி 2019