இன்றைய ராசி பலன், டிசம்பர் 11, 2019…!

மேஷம்
திட்டமிட்ட விஷயங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். மனசஞ்சலங்களிலிருந்து விடுபடுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நிதிவிவகாரங்களில் திருப்தி ஏற்படும்.

ரிஷபம்
மகிழ்ச்சியான நாள். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். புதுப்புது முயற்சிகளில் களமிறங்குவீர்கள். தடைகளை தாண்டி வீறுநடை போடும் நாள்.

மிதுனம்
வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை உணர்வீர்கள். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். மகிழ்ச்சியான நாள்..

கடகம்
கடித வழித்தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். புதுப்புது யுத்திகளை கையாளுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.

சிம்மம்
காலைநேரத்தில் அதிக படபடப்பு இருந்தாலும், பிற்பகல் வேளையில் சாந்தமாவீர்கள். விரயத்தை தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம். நெருங்கிய உறவு ஒன்றுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உருவாகும்.

கன்னி
உறவினர்களிடையே உங்களது மதிப்பு அதிகரிக்கும். உங்களது கோரிக்கைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை முன்னுரிமை அளித்து நிறைவேற்றுவீர்கள்.

துலாம்
பணிமாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். கிரகங்களின் சாதகமான பார்வையினால் நினைத்த காரியங்கள் சிறப்பாக முடியும். விரயத்தை தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம்.

விருச்சிகம்
எல்லாம் சரியாக நடைபெற்று வந்தாலும், மனதில் ஏதோ இனம்புரியாத பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த சில நாட்களுக்கு இந்த நிலையே நீடிக்கும். மனம் சஞ்சலத்துடன் இருக்கும்.

தனுசு
நீண்டநாள் விவகாரத்துக்கு தீர்வு கிடைக்கும். நேர்மையாக இருப்பதால் கிடைக்கும் பலனை உணர்வீர்கள். பேச்சுவார்த்தையால் எவ்வித விவகாரத்தையும் தீர்க்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

மகரம்
மனசாந்தி அடைவீர்கள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழில்சாார்ந்த விசயங்கள் மகிழ்ச்சியளிக்கும். புதிய வழிகளில் பணம் சம்பாதிக்க முயல்வீர்கள்.

கும்பம்
புதிய வேலை கிடைக்கும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தடை, தாமதங்கள் நல்லதுதான் என்று என்பதை உணர்வீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

மீனம்
நீண்ட தொலைவு தகவல்கள் மனதுக்கு இதமளிக்கும்வகையில் அமையும். சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்