வடமராட்சி கிழக்கில் அதி தீவிர மணல் திருட்டு வேடிக்கை பார்க்கும் பொலிஸ்….. !

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க விழிப்பு குழுக்கள் செயற்படுவதென பருத்தித்துறை பொலிஸ் பிரதேச செயலகம் பிரதேச சபை மக்கள் அமைப்புக்கள் இணைந்து  தீர்மானம். அண்மையில் அரசால் மணல் மண் கொண்டு செல்வதற்காகான வழி அனுமதி பத்திரம் கொண்டு செல்வதற்க்கான அனுமதி தற்காலிகமாக ஒரு வாரம் தகர்த்தப்பட்ட. நிலையில் வடமராட்சி கிழக்கு குடாரப்பு,செம்பியன்பற்று மாமுனை பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் ரிப்பர் ரக வாகனங்கள் கன்ரர் ரக வாகனங்கள் என்பன சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த பல  நாட்களாக பக்கோ ரக வாகனம் மற்றும் ஆட்கள் மூலம் மணல் அகழ்ந்து செல்வதானால் அப்பிரதேச மக்கள் அதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் அவர்களால் தடுக்க இயலாத நிலையில் பருத்தித்துறை மற்றும் பளை பொலிசாருக்கு மக்கள் கிராம சேவகர் பிரதேச செயலர் ஊடக அறிவிக்கப்பட்டும் இன்று வரை சரியாக  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் அண்மையில்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மாவட்ட செயலர் ஊடக பொலிசாரை அழைத்தும் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தடுப்பதறக்கான நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கில் குடாரப்பில் இடம் பெற்ற பிரதேச செயலர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பருத்தித்துறை பொலிசார் கிராம மட்ட அமைபுக்கள் என்பன  மேற்கொண்ட முடிவின் பிரகாரம் 12/12/2019  பிற்பகல் 3:00 மணிக்கு பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கிராம சேவகர்கள் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பருத்தித்துறை பொலீசார் மற்றும் கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு இடம் பெற்றது. இதே வேளை பருத்தித்துறை கருத்து தெரிவிக்கும் போது தமக்கு பொலிஸ் மா அதிபர் குறித்த மணல் கொண்டு செல்லும் உழவு இயந்திரங்கள் ரிப்பர் வாகனங்கள் என்பவற்றை எக்காரணம் கொண்டும் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை  மறிக்கவோ எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என்று கட்டளையிட்டதாகவும் இதனால் தம்மால் அந்த கட்டளையை மீறி ஏதும் செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவித்ததுடன் மணல் கொண்டு செல்வதற்க்குரிய வீதி போககுவரத்து அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதேவேளை இன்று காலை குடரப்பு செம்பியன்பற்று பகுதிக்கு வருகை தந்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உட்பட்ட பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கும் போது புதிய அரசு சுற்று சூழல் பாதுகாப்பில் அக்கறை கொள்ளவில்லை என்றும் உடனடியாக முன்பிருந்த சட்ட நடைமுறையில் மணல் அகழ்வு விநியோகம் என்பன இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். பருத்தித்துறை போலீஸ் நிலைய சந்திப்பில் பருத்தித்துறை பொலீசார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆகியோர் இணைந்து மணல் அகழ்வை தடுப்பதற்கு ரோந்து மற்றும் காவல் பணிகளில் ஈடுபடுவதாகவும் தீர்மானித்ததுடன் இன்று  முதல் கிராமம் கிராமம் கிராமமாக ஒலிபெருக்கி மூலம் அறிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க பட்டது. குடாரப்பு செம்பியன் பற்று குடத்தனை நாகர்கோவில் உட்பட்ட  பகுதிகளில் தொடர்ந்தும் சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுகிறது.இச் சட்ட விரோத மணல் அகழ்வு மூலம் குடாரப்பு செம்பியன் பற்று பகுதிகளில் பாரிய சூழல் மாசு கடல் நீர் தேங்க கூடிய அபாயம் கனிய வள அழிப்பு என்ன இடம் பெற்றுள்ளன.