யாழில் தொலைபேசி ஊடாக இடம் பெற்ற நூதன திருட்டு!

யாழ்-திருநெல்வேலியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் நபர் ஓருவர் தொலைபேசி ஊடக பணம் அனுப்புமாறு கூறி தொலைபேசி இலக்கம் ஒன்றை வழங்கி அதற்க்கு 5000.00 ரூபா அனுப்புமாறு கோரியுள்ளார் இதனையடுத்து குறித்தவர்த்தகரும் அந்த இலக்கத்திற்கு பணத்தை அனுப்பியுள்ளார் பின் அந்த நபர் பணத்தை பையினுள் இருந்தது எடுப்பதுபோல் பாசாங்கு செய்துவிட்டு பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.குறித்தகடை உரிமையாளர் உடனடியாக வாடிக்கையாளர்சேவை முகவரிடம் தொடர்பு கொண்டு நடந்த விடையத்தை கூறி தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பிய பணத்தை முடக்குமாறு கோரியுள்ளார்.இதற்கு அந்த வாடிக்கையாளர்சேவை நிலையம் அதனை முடக்க முடியாது அவ்வாறு ஒருசேவை தங்களிடம் இல்லை எனவும் பதில் அளித்துள்ளார்கள்.இதனால் ஏமாற்றம் அடைந்த வர்த்தகர் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

*குறித்த தொலைபோசி வலையமைப்பு அதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது எனின் இவ்வாறான தொலைபேசி ஊடாக பணம் பரிமாறும் சேவை எதற்கு?

*இவ்வாறான தொலைபேசி ஊடாக பணம் பரிமாறும் சேவையினை மத்தியவங்கி தடைசெய்யவேண்டு.

இது போன்றசம்பவங்கள் அதிகம் இலங்கையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.