முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளப்பெருக்கில் ஒன்பதாயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 05.12.19 அன்று இரவு தொடக்கம் 06.12.19 காலை வரை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9ஆயிரத்தி 297 குடும்பங்களை சேர்ந்த 30ஆயிரத்தி 20 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

தொடர் மழைவெள்ளத்தினால் கரைதுறைப்பற்று,புதுக்குடியிருப்பு,ஒட்டுசுட்டான்,மாந்தை கிழக்கு,துணுக்காய் வெலிஓயா பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் பிரதெசத்தில் 169 குடும்பங்களை சேர்ந்த 509 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 இடைத்தங்கல் முகாம்களில் 83 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் தங்கவைக்கப்டப்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8ஆயிரத்தி 889 குடும்பங்களை சேர்ந்த 28ஆயிராத்தி 831 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒன்பது இடைத்தங்கல் முகாம்களில் 236 குடும்பங்களை சேர்ந்த 797 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 142 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 இடைத்தங்கல் முகாமில் 4 கடும்பங்களை சேர்ந்த 13 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 158 குடும்பங்களை சேர்ந்த 515 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வெலிஓயா பிரதேசத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 15 இடைத்தங்கல் முகாம்களில் 323 குடும்பங்களை சேர்ந்த 1060 மக்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான உடனடி உதவிகள் வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன