மழை காரணமாக இடம் பெயர்ந்த மக்களை மிரட்டி கலைத்த கிராம சேவகர்!

முல்லைத்தீவு மாவட்டம் கைவேலி மயில் குஞ்சன் குடியிருப்பில் மழை காரணமாக இடம்பெயர்ந்து தேவாலயத்தில்  தங்கி இருந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கிராமசேவகர்

அண்மையில் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக தமது வீடுகளில் வசிக்க முடியாது என்பதால் பாதுகாப்பை தேடித் தமது பகுதியில் உள்ள தேவாலையம் ஒன்றில் சுமார் 35 குடும்பங்களுக்கு மேல் தங்கியிருந்தனர்அங்கு தங்கி இருந்த மக்களை கிராமசேவகர் வலுக்கட்டாயமாக வெளியேற்வெறிய  சம்பவம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது

உங்களுக்கு எங்களால் நிவாரணம் தர முடியாது. ஆகவே நீங்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டாம் என்று அவர் வற்புறுத்தியே  அவர்களை அனுப்பி இருக்கிறார்கள்.

அந்த மக்கள் வெள்ளம் காரணமாக தமது வீட்டில் குடியிருக்க முடியாது என்பதனாலேயே அங்கு தங்கியிருந்தனர்

வெளியேற்றப்பட்ட மக்கள்  தமது வீடுகளுக்குள்ளும்  வெள்ளம் மற்றும் மழை பாதிப்புகளுக்கு மத்தியில் இன்னல்களுக்கும் உள்ளாகி உள்ளனர்.

இதுதொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கும் போது தங்களால் மழை காரணமாக தங்கள் வீட்டிலும் இருக்க முடியவில்லை இப்போது மண்டபத்திலும் இருக்க முடியவில்லை. இது தமக்கு இழைத்த அநீதி என்றும் இது தொடர்பில் பிரதேச செயலாளர் மாவட்டச் செயலாளர்கள் உரிய கிராம சேவையாளருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

தமக்கு வதிவிட உரிமை உள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது