இன்றைய ராசி பலன் 07/12/2019 சனிக்கிழமை

மேஷம்
தேடல்கள் இருந்தால் தானே வாழ்வில் திருப்புமுனை என்று ஏதாவது ஒன்று ஏற்படும்? பிள்ளைகள் என்ன வகுப்பு படிக்கிறார்கள் என்று அவ்வப்போது தெரிந்து கொள்வது நல்லது. மேலோட்டமான மனம் வேண்டாமே நண்பர்களே.

ரிஷபம்
புரிதலுக்காக மேலும் சில விஷயங்களை கற்கத் தொடங்குவீர்கள். அது உங்களை மேலும் குழப்பிவிட்டு தான் ஓயும். நம்பிக்கை இல்லாமல் எந்த காரியத்தையும் கையிலெடுக்க வேண்டாம். ஆற்றல் உங்கள் பலம், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்
கல்வியில் முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாக காண்பீர்கள். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். கடல் கடந்து பணிக்கு செல்லும் சூழல் அருகில் வரும் வாய்ப்புள்ளது. கடினமான சூழல்களை வழக்கம் போல் உங்கள் ஸ்டைலில் எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

கடகம்
உங்கள் பலம் என்ன. பலவீனம் என்ன என்பதை தெரிந்து செயல்படுவீர்கள். பெற்றோர்கள் உங்கள் செயலால் மகிழ்ச்சி அடைவார்கள். சேமிப்பு பழக்கம் உண்டாகும். நிறைய இழந்துவிட்டோமே என இப்போது உணருவீர்கள்.

சிம்மம்
மற்றவர்கள் மீதான உங்கள் கவனத்தை திருப்புங்கள். முதலில் உங்களை கவனியுங்கள். உங்கள் வேலைகளை முடித்துவிட்டீர்களா என்று பாருங்கள். வீண் விவாதங்கள் வேண்டாம். அவப் பெயர்களை சுமக்க நேரிடும்.

கன்னி
பெற்றோர்களின் அன்பைப் பெறுவீர்கள். புகுந்த இடத்திலும், உங்களுக்கான இடத்தை அன்பால் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள் இன்று. உங்களுக்கே உரித்தான சோம்பேறித்தனத்தை மட்டும் விட்டொழிய முயற்சி செய்யுங்கள்.

துலாம்
சிறிய விஷயங்களுக்கெல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். அதில், உங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. ஆகையால், நிலவரத்தை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

விருச்சிகம்
புதிய முயற்சிகளில் இன்று முடிந்தளவு ஈடுபட வேண்டாம். தள்ளிவைக்க முயற்சி செய்யுங்கள். குறிப்பாக, வரன் பார்க்க துவங்குவதாக இருந்தால், இன்று ஈடுபட வேண்டாம். விநாயகரை வழிப்பட்டு இன்றைய நாளை தொடங்குங்கள்.

தனுசு
சலுகைக்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை தனுசு ராசி அன்பர்களே… உங்களுக்கானதை நீங்கள் தான் கேட்டுப் பெற வேண்டும். யாருக்காகவும் உங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டாம். நிதானத்தையும் கைவிட்டுவிட வேண்டாம்.

மகரம்
வாழ்க்கை சுலபமானது அல்ல என்பதை இன்று அறிந்து கொள்வீர்கள். வாய்ப்புகள் கைக்கு அருகே வந்தும் தட்டிப் போகும். என்னடா வாழ்க்கை இது சில சமயங்களில் நினைக்கத் தோன்றும். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருக்கவே செய்யும் என்பதை மறக்க வேண்டாம்.

கும்பம்
சில அதிரடியான நடவடிக்கைகளில் இன்று ஈடுபடுவீர்கள். தொடர் தோல்விகளே இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது என்பதில் ஆச்சர்யம் வேண்டாம். இருப்பினும், நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது உசிதம்.

மீனம்
பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களில் பெருமளவு குறைப்பீர்கள். குடும்பத்தில் மீண்டும் நிம்மதி பெருகும். அதற்காக நீங்கள் இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீண் போகாது. மகிழ்ச்சி மீண்டும் திரும்பும் நாள் இன்று.