பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் – த.தே.கூ.

புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எனினும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது  அழுத்தங்களை முழுமையாக பிரயோகிப்போம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

 

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலைங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற  பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.