திருகோணமலையில் மழை, வெள்ளத்தால் 1,380 குடும்பங்கள் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் மழையினால் 1,380 குடும்பங்களைச்சேர்ந்த 4,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 17 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

 

குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச பிரிவில் அதிக சேதங்களைக் கொண்டிருப்பதாகவும் அங்கு மாவடிச்சேனை அரசினர் கலவன் பாடசாலையில் தற்காலிகமாக முகாம் அமைக்கப்பட்டு 23 குடும்பங்களைச்சேர்ந்த 75 உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் அடைக்கலம் பெற்றுள்ள 130 குடும்பங்களைச் சேர்ந்த 465 உறுப்பினர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும் அனர்த்த முகாமைத்துவ திருகோணமலை மாவட்ட பிரிவு தெரிவித்துள்ளது.