ராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

நபர்களை கடத்திச் சென்று கொலை செய்த குழுவொன்றின் உறுப்பினர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் தொடர்பான தகவல்களைஅறிந்திருந்தும் அவற்றை பொலிஸாருக்கு அறிவிக்காமல் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன செயற்பட்டுள்ளதாக கூறி அவரை நீதிமன்றில் ஆஜராக அறிவித்தல் விடுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோட்டை நீதிவான்  ரங்க திஸாநாயக்க நிராகரித்தார்.

 

கம்பஹா பகுதியைச் சேர்ந்த களுதேவகே அய்லிவ் ஜன் ஜித் டி சில்வா எனும் பொது மகனால் தாக்கல் செய்யப்ப்ட்ட  இந்த தனிப்பட்ட முறைப்பாட்டு மனு தொடர்பிலான உத்தரவை அறிவித்தே நீதிவான் இன்று இம் மனுவை நிராகரிப்பதாக கூறினார்.