இரு அர­சுகள் குறித்த பிரித்­தா­னிய கட்­சியின் கருத்து ; கடு­மை­யான அதி­ருப்­தியை இலங்கை தெரி­விக்­கின்றது

இலங்­கையில் இரு தேசம் ஒரு நாடு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற பிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்து தொடர்பில் இலங்கை அர­சாங்கம் அதன் கடு­மை­யான அதி­ருப்­தியை வெளிப்படுத்தி­யுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

 

பிரித்­தா­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தலை கொண்ட அவர்­களின் காய்­ந­கர்த்­தல்­களின் இலங்கை தலை­யிட தயா­ரில்லை எனவும் வெளி­வி­வ­கார செய­லாளர் அறி­வித்­துள்ளார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சின் செய­லாளர் ரவிநாத் ஆரி­ய­சிங்க இது குறித்து தெளி­வு­ப­டுத்­து­கையில்

இலங்­கையில் இரண்டு இராச்­சியம் என்ற கருத்­துக்கள் இங்­கி­லாந்து கட்­சிகள் முன்­வைக்கும் கார­ணியில் நாம் அறிந்த அளவில் இது டுவிட்டர் மற்றும் முகப்­புத்­தக கணக்கு பதி­வு­களை அடை­யா­ள­ப­டுத்­திய கார­ணி­யா­கவே கூறப்­பட்டு வரு­கின்­றது. அவர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு எதுவம் எமக்கு கிடைக்­க­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் தற்­போது இங்­கி­லாந்தில் தேர்தல் ஒன்று இடம்­பெ­ற­வுள்ள நிலையில் அவர்­களின் அர­சியல் காய்­ந­கர்த்தல் முறை­மையில் ஒன்­றாக இது அமைந்­துள்­ளது. எனினும் இது இடம்­பெற்­றது கடந்த மாதம் 25 ஆம் திக­தி­ய­ல­வி­லாகும்.  இந்த கருத்து குறித்து  லண்­டனில் உள்ள எமது தூத­ரகம் மூல­மாக இலங்­கையின் உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடு என்ன என்­பதை இரண்டு கடி­தங்­களின் மூல­மாக அறி­வித்­துள்ளோம்.

கொன்­ச­வேடிவ் கட்­சியின் கருத்து தொடர்பில்  இலங்கை அர­சாங்கம் கடு­மை­யான தமது அதி­ருப்­தியை வெளி­யி­டு­வ­துடன் இலங்­கையின் அர­சியல் அமைப்பின் பிர­காரம் இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கொள்­கை­யாகும் என்­பதை நாம் அறி­வித்­துள்ளோம். எனினும் அவர்­களின் அர­சியல் நகர்­வு­களை நாம் கையில் எடுத்து பிர­சாரம் கொடுக்­கக்­கூ­டாது என்ற கார­ணத்­தினால் இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான நகர்­வு­களில் இதனை முடித்­துக்­கொண்டோம்.  எனினும் அண்­மையில் இலங்­கையின் அர­சியல் களத்தில் சிலர் இந்த கார­ணி­களை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ள கார­ணத்­தினால் வெளி­வி­வ­கார அமைச்சு பதில் தெரி­விக்­க­வேண்­டி­யுள்­ளது. அதற்­கான இந்த கார­ணி­களை நாம் மீண்டும் ஊட­கங்கள் முன்­னி­லையில் தெரி­விக்­கின்றோம்.  இலங்கை இராச்­சி­யத்தில் ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்­கையை ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. அதற்­கான சாதி­யமும் இல்லை என்­பதை உறு­தி­யாக தெரி­வித்­துள்ளோம் என்றார்.

இந்­நி­லையில் நேற்று காலையில் வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்ட ஊடக அறிக்­கையில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­னது,

பிரித்­தா­னி­யாவில் எதிர்­வரும் 12ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­காக  கொன்­ச­வேடிவ் கட்­சி­யா­னது  தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் , இலங்­கையின் அர­சியல் குழப்­பங்­க­ளுக்கு  இரு அர­சுகள் இருப்­பதே  தீர்வு என்ற பதம் உள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில சுட்­டிக்­காட்­டி­யது தொடர்பில்  இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு தனது கவ­னத்தை செலுத்­தி­யுள்­ளது.

கொன்­ச­வேடிவ் கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் 55ஆவது பக்­கத்தில், சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்­திய கிழக்கில் இரு அர­சுகள்  தீர்வு எனும் பதம் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சின் ஆலோ­ச­னைக்கு அமைய  பிரித்­தா­னி­யாவில்  உள்ள இலங்கை தூத­ரகம் இது­கு­றித்து கடு­மை­யாக எதிர்ப்பு  முறை­யீட்டை கொன்­ச­வேடிவ் கட்­சியின் இணைத் தலை­வ­ரான ஜேம்ஸ் கிள­வ­ரிடம் முன்­வைத்­துள்­ளது.

இந்த முறைப்­பாட்டு கடிதம் மூலம் இலங்­கைக்­கான  உயர் ஸ்தானிகர் மனிஷா குண­சே­க­ர­வினால் நம்­வம்பர்  மாதம் 27 திகதி அன்று தெரி­விக்­கப்­பட்­டது. இரு அர­சுகள்  தீர்வை  ஏற்­றுக்­கொள்­வ­தில்லை  எனவும்  ஐக்­கிய ராஜி­யத்தில் உள்ள எந்த ஒரு கட்­சியும் இவ்­வா­றான நிலைப்­பாட்டில் இருந்­த­தில்லை  எனவும் அனைத்து கட்­சி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட பிரித்­தா­னிய அர­சாங்கம் ,   ஐக்­கிய இலங்­கையில் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்க ஆத­ரவு தெரி­வித்­தன எனவும்  இலங்கை உயர் ஸ்தானிகர் அக்­க­டி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

இக்­க­டி­தத்­திற்கு மின் அஞ்சல் மூலம் 27 நவம்­பரில் கொன்­ச­வேடிவ் கட்­சியின் பிர­தித்­த­லைவர் போல் ஸ்கல்லி பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்­தி­ருந்தார், இலங்­கை­யு­ட­னான கட்­சியின் நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை. இரு அர­சுகள்  என்ற பதம் இஸ்ரேல், பலஸ்­தீ­னத்­தையே குறிக்­கின்­றது என அவர் தெரி­வித்­தி­ருந்தார். மேற்­படி கருத்­துடன் இருப்­ப­தா­கவே ஐக்­கிய ராஜி­யத்தின் சுற்­றுச்­சூழல் உணவு மற்றும் கிரா­மிய விவ­கார அரச செய­லாளர் தெரேசா வில்லேஸ் தனது சமூகவலைத்தில்  நவம்பர் 30 ஆம் திகதி பதிவேற்றியிருந்தார். இரு அரசுகள்  என்ற தீர்வு இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கே பொருந்தும்.

இலங்கைக்கல்ல என டுவிட்டரில் நேற்று  3ஆம் திகதி கொன்சவேடிவ் கட்சியின் பிரதித்தலைவர் போல் ஸ்கல்லி மீண்டும் தெரிவித்திருந்தார். இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட கருத்தை கொனசவேடிவ் கட்சி திருத்திக்கொள்ளவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்பார்க்கின்றது என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.