இந்த வார ராசி பலன் 05/12/2019 வியாழக்கிழமை

மேஷம் :
ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், புதன் எட்டாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் குரு, சனி கேது, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. குரு பகவான் பார்வையால் நன்மைகள் நடக்கும், நல்ல வேலை மாற்றம் கிடைக்கும். சந்திரன் சஞ்சாரமும் அற்புதமாக உள்ளது. பணவரவு அற்புதமாக இருக்கும் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். தடைபட்ட காரியங்கள் கைகூடும். பெரிய பலத்தோடு வாரம் உள்ளது. மகிழ்சியான வாரம், அப்பாவின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். பிசினஸ் சக்சஸ் ஆகும். உங்க முன்னோர்கள் ஆசி கிடைக்கும். வெளிநாடு தொடர்பான கல்வி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் நல்லதே நடக்கும். பெண்களுக்கு நல்ல வாரம், வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் கவனம் பேச்சில் கவனமாக பேசவும் எச்சரிக்கை தேவை. இந்த வாரம் லாபமான வாரம். முருகப்பெருமானை வழிபடுங்க நல்லது நடக்கும்.

ரிஷபம்
ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு ஆறாம் வீட்டில் புதன், செவ்வாய் ஏழாம் வீட்டில் சூரியன், எட்டாம் வீட்டில் குரு, சனி,சுக்கிரன்,கேது என இந்த வாரம் தொடங்குகிறது. இந்த வாரம் பணவரவு அதிகமாகும். சூரியன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண தடைகள் விலகும். இந்த வாரம் ஆரம்பத்தில் சுமார்தான் காரணம், சந்திராஷ்டமம் இருக்கிறது. அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. எந்த செயலையும் நிதானமாக முடிவெடுங்க. வேலை நெருக்கடி இருக்கும் பளுவும் அதிகமாகும். ரொம்ப கவனமாக இருங்க. உங்க தகவல் தொடர்புல கவனமாக இருங்க. ஃபேஸ்புக் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுவதில் கூட கவனமாக இருங்க. உங்க உடம்புல அக்கறை காட்டுங்க. மாணவர்களுக்கு நல்ல வாரம் படிப்பில முன்னேற்றம் வர வாய்ப்பு இருக்கு. அஷ்டமத்தில் நான்கு கிரகங்கள் சஞ்சரிப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.
முன் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். அப்பாவின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். உங்க அம்மாவின் உடல் நலத்தில அக்கறை காட்டுங்க, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் கவனமாக இருங்க. வங்கிக்கடன் கிடைக்கும். விபரீத ராஜயோக காலமாகும். நவம்பர் 30 பிற்பகல் 2.32 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் வேகமாக போக வேண்டாம் மெதுவாக செல்லவும். ஏழுமலையான வழிபடுங்க நல்லது நடக்கும்.

மிதுனம்
ராசிக்குள் ராகு ஐந்தாம் வீட்டில் புதன், செவ்வாய், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் வீட்டில் குரு, சனி, கேது, சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.
உங்களுக்கு யோகமான வாரம். புதனின் அனுகூலம் சந்தோஷத்தை தரும் திடீர் அதிர்ஷ்டம் வரும். குருவின் நேரடி பார்வை அதிர்ஷ்டத்தை தேடி வருகிறார். சகோதர உறவு சந்தோஷத்தை கொடுக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் பயணங்களினால் சிறப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். அரசு உதவிகள் கிடைக்கும். ஏழாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. உங்க தொழில் பார்ட்டனை விமசர்னம் செய்யாதீங்க. இந்த வாரம் நீங்க பெருமாள் கோவிலுக்கு போய் புதன்கிழமை விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும். நவம்பர் 30 பிற்பகல் 02.45 மணி முதல் டிசம்பர் 3 நள்ளிரவு 12.56 மணி வரை உள்ள நாட்களில் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும்.

கடகம்:
ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, நான்காம் வீட்டில் புதன், செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சூரியன், ஆறாம் வீட்டில் குரு,சனி கேது,சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு நல்லது நடக்கத் தொடங்கும். ஒளிமயமான எதிர்காலம் உற்சாகத்தை கொடுக்கும். சூரியனால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. காரணம் செவ்வாய் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். ஆறாம் வீட்டில் ராசி அதிபதி சந்திரன் கூட நான்கு கிரகங்கள் இணைந்திருப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை பளு குறையும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும், சுறுசுறுப்பாக உற்சாகமாக இருப்பீர்கள். சொந்த இடம் வாங்க யோகம் தேடி வருகிறது. புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு வருகிறது. உயர்பதவிகள் தேடி வரும். தெளிவான முடிவுகள் எடுங்க அது நல்லது. தனலாபம் தரக்கூடிய வாரம். டிசம்பர் 03 நள்ளிரவு 12.56 மணி முதல் டிசம்பர் 5 பிற்பகல் 1.23 வரையும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். உடல்நலத்தில அக்கறை காட்டுங்க. வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்மம்
ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, மூன்றாம் வீட்டில் புதன், செவ்வாய், நான்காம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் குரு, சனி கேது,சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. இந்த வாரம் மாற்றங்களும் முன்னேற்றங்களையும் தரக்கூடிய வாரம். காரணம் குருவின் பொன்னான பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்யும் தொழிலில் லாபங்கள் தேடி வரும். பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. தொழிலில் லாபம் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு அதிர்ஷ்டகரமான வாரம், வெற்றிகள் தேடி வரும், மாணவர்களுக்கு உயர்கல்வி முயற்சிகள் முன்னேற்றத்தை தேடி தரும். பெண்கள் கவனமாக இருங்க, வீட்டில் விட்டுக்கொடுத்து போங்க. வீடு கட்டும் யோகம் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும் யோகமான வாரம். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும் வீட்டில் மதிப்பு மரியாதை கிடைக்கும். உங்க தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். பெரும் சந்தோஷம் தேடி வரும். டிசம்பர் 5 பிற்பகல் 1.23 முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

கன்னி
ராசிக்கு இரண்டாம் வீட்டில் புதன்,செவ்வாய் மூன்றாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் குரு, சனி, கேது, சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் ராகு என இந்த வாரம் தொடங்குகிறது. இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் வாரம். உங்க ராசி நாதன் புதன் அற்புதங்களை தரப்போகிறார். சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். குரு பகவானால் பதவி மாற்றங்கள், வேலை மாற்றங்கள் தேடி வரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிகார பதவிகள் கூடி வரும். முயற்சிகளில் வெற்றியை தேடி தருவார் சூரியன். அரசு அதிகாரிகளுக்கு உயர்வான வாரம். செவ்வாய் இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் கோபம் அதிகமாக வரும், பேச்சில் கவனமாக இருங்க. தேவையில்லாம பேசி வம்பை விலைக்கு வாங்காதீங்க. உடல் நலத்தில கவனமாக இருங்க. பித்ரு கடன் செய்யலாம். ஞாயிறு கிழமைகளில் அன்னதானம் செய்யுங்கள். முன்னோர்களுக்கு போய் அன்னதானம் சேரும். திடீர் வருமானங்கள் வரலாம் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். எதையும் எதிர்கொள்ளும் பலம் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும், இருந்தாலும் வரக்கூடிய வருமானத்தை அர்த்தாஷ்டம சனி தடையை ஏற்படுத்துவார். உணவு விசயத்தில கவனமாக இருங்க. தான தர்மங்கள் பண்ணுங்க. செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வழிபடுங்க நல்லது நடக்கும்.

துலாம்
ராசிக்குள் செவ்வாய், புதன், இரண்டாம் வீட்டில் ராசிநாதன் சூரியன், மூன்றாம் வீட்டில் குரு, சனி கேது, சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என இந்த வாரம் தொடங்குகிறது. சந்தோஷ செய்திகள் தேடி வரும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பணவரவு அதிகமாக இருக்கும். இந்த வாரம் வார்த்தைகளில் நிதானமாக இருங்க. பேச்சில் கவனமாக பேசுங்க. சூடான வார்த்தைகள் பிரச்சினையை ஏற்படுத்தும். உங்க மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும். தூர பயணங்களால் பலன்கள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி தேடி வரும். எதிலும் சுறுசுறுப்பாகவும் தெம்போடும் இருப்பீர்கள். உங்களுக்கு வீடு மாற்றம் நன்மையை தரும். கணவன் மனைவி உறவு உற்சாகத்தை தரும். இல்லறம் நல்லறத்தை தரும். அப்பா வழி உறவுகளால் நல்லது நடக்கும். புதிய வேலைகள் கிடைக்கும் சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இந்த வாரம் ரொம்ப சந்தோஷமான வாரம், உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடுமையான உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். என்னடா இப்படி நடக்குதே என்று சில நேரங்களில் சலிப்பாக உணர்வீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்க. வாராஹி அம்மனை வழிபடுங்க நல்லது நடக்கும். கந்தர் சஷ்டி கவசம் படிங்க நல்லது நடக்கும்.

விருச்சிகம்
ராசிக்குள் சூரியன், இரண்டாம் வீட்டில் குரு,சனி, கேது, சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய்,புதன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. குடும்ப ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நன்றாக உள்ளது. நல்ல வேலைவாய்ப்பு, புரமோசன் கிடைக்கும். இந்த வாரம் உயர் பதவிகள் தேடி வரும். அரசு அதிகாரிகள் வேலையில் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கும் வாரம். முன்கோபம் அதிகம் வரும், கட்டுப்படுத்துங்க. உங்க களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சென்றுள்ளதால் திருமணம் கை கூடி வரும். வாக்கு ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் பேச்சில் கவனமாக இருங்க. பணவரவு அற்புதமாக இருக்கும். நிதி நிலைமை அதிகரிக்கும். நெருக்கடிகள் விலகும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் ரொம்ப கோபப்படாதீங்க. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. சுப முயற்சிகள் கை கூடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நடக்கும். அதிக பணவரவு கிடைக்கும். ராசி நாதன் மறைந்திருக்கிறார். ராசியில் சூரியன் இருக்கிறார் உடம்புல உஷ்ணத்தினால் காயங்கள் புண்கள் வரலாம். மருத்துவ ஆலோசனை தேவை. அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

தனுசு
ராசிக்குள் சனி, கேது, குரு, சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சூரியன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதனோடு கிரகங்களின் சஞ்சாரம் தொடங்குகிறது. குரு ஜென்மத்தில் அமர்ந்து யோகத்தை தருகிறார். இந்த வாரம் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் வரலாம். அதை சமாளிப்பீர்கள்.
குடும்ப வாழ்க்கையில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. தேவையில்லாத வம்பு வழக்கில சிக்க வேண்டாம். வேலையில கவனமாக இருங்க வம்பு வதந்திகளை பேசி மாட்டிக்காதீங்க. குழந்தைகள் மூலம் நல்லது நடக்கலாம். கடவுள் அருளால் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாரம், நினைவாற்றல் பெருகும். வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டகரமான வாரம். உடல் நலத்திலும் கொஞ்சம் கவனம் வையுங்க. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
மகரம்
ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் குரு, சனி, கேது, சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சூரியன், தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதனோடு இந்த வாரம் தொடங்கிறது. தொழிலில் ஆதாயம் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய், புதன் சேர்க்கையால் புதிய தொழில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். வீடு நிலம் வாங்கலாம். குரு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சுப செலவுகள் ஏற்படும். புதிய முதலீடுகள் லாபத்தை தரும். அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்து மாட்டிக்காதீங்க. அனுபவம் நிறைய புத்தி கொள்முதலை கொடுக்கும். எதையும் செய்யும் முன்னாடி பெரியவங்க ஆலோசனையை கேளுங்க. நிறைய வேலை வாய்ப்பு வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும். எதுவாக இருந்தாலும் அவசரப்பட்டு முடிவு செய்யாதீங்க. பெண் குழந்தைகள் மீது கவனமாக இருங்க. பேசி அவங்க பிரச்சினையை கையாளுங்க. பெண்களுக்கு வேலை மாற்றம் கிடைக்கும். பெண்கள் சோசியல் மீடியாவில ரொம்ப ஈடுபாடு காட்டாதீங்க. மாணவர்கள் சரஸ்வதி தேவியை வணங்குங்கள். சிவ ஆலயத்திற்கு சென்று காலபைரவரை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

கும்பம்
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் குரு, சனி, கேது, சுக்கிரன் சந்திரன், தொழில் ஸ்தானத்தில் சூரியன், பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் புதனோடு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் தொடங்குகிறது. முன்னேற்றத்துடன் கூடிய மாற்றங்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்டமான வாரம், உங்க முயற்சிகள் சாதகமாக இருக்கும். வெற்றிகள் தேடி வரும் வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்க உடல் நலத்தை கவனிங்க. இந்த வாரம் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பிள்ளைகள் மீது அக்கறை காட்டுங்க.
நினைத்தது நிறைவேறும் காலம் இது புதிய தொழில் தொடங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மன உளைச்சல்கள் விலகும். உற்சாகமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நிதானத்தை கடைபிடிப்பீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். வீடு கட்டும் யோகம் தேடி வருகிறது. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி பயில வாய்ப்பு தேடி வருகிறது.

மீனம்
ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, தொழில் ஸ்தானத்தில் குரு, சனி, கேது, சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் சூரியன், எட்டாம் வீட்டில் செவ்வாய், புதன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சுமாரான பலன்களையே தரும். கிரகங்களின் சஞ்சாரத்தினால் புதிய அனுபவங்கள் தேடி வரும். நன்மைகள் நாடி வரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நிர்வாக பதவிகள் தேடி வரும். உங்க குடும்ப ரகசியங்களை பொது வெளியில் பேச வேண்டாம். அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். தனிப்பட்ட ரகசியங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்கள் கவனமாக படிங்க மறந்து போகுதே என்ற மன அழுத்தம் ஏற்படும். போட்டி தேர்வுகள் உங்களை பாடாய் படுத்தும். மாணவர்கள் லட்சுமி ஹயக்ரீவரை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.