தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் அணிக்கு முகாமைத்துவ பயிற்சி….!

யாழ் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் குழுக்களுக்கான மாவட்ட குழுக் கூட்டமும் கழிவு முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கும்  யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர்  இன்பம் தலமையில் மருதனார் மடம் விவசாய கல்லூரி மண்டபத்தில்  நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் இறைவணக்கத்துடன் இடம்பெற்றது.  இதில் கருத்துரைகளை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இளைஞர் திட்ட பொறுப்பாளர் சித்திரா தர்மலிங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு  இயக்கத்தின் செயறறிட்ட பொறுப்பாளர் தட்சா தவச்செல்வம் ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்வில் யாழ்மாவட்ட இளைஞர் குழு உறுப்பினர்கள் நாற்பது பேர்வரை கலந்து கொண்டனர்