சகரான் விவகாரம் ஐந்து வர்த்தகர்களுக்கு வெளிநாடு செல்ல தடை!


உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட தற்கொலைதாரிகளுடன் மறைமுகமான முறையில், தொலைபேசிகள் ஊடாக தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டி வர்த்தகர் ஐவருக்கு, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநயாக்க, நேற்று பிறப்பித்தார்.
அந்த ஐந்து வர்த்தகர்களும் அடிக்கொரு தடவை வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்கள் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
அதனையடுத்தே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.