குடரப்பு பகுதியில் பாரிய திருட்டு மணல்  அகழ்வு!அதனை தடுக்க காவல்துறை முன்வருவதில்லை மக்கள் குற்றச்சாட்டு

 

குடரப்பு பகுதியில் பாரிய திருட்டு மணல்  அகழ்வு இடம் பெறுவதாகவும் அதனை தடுக்க காவல்துறை முன்வருவதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியிள்ளனர்.

அண்மை காலமாக பகல் இரவாக மணல் திருட்டு இடம் பெற்றுவருவதாகவும் இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் காவல்துறையினருக்கு கடிதம் மூலம் அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தினந்தினம் பல கன்ரர் ரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டுக்நகொண்டிருப்பதாகவும் தமது கிராம வீதிகளைக்கூட அகழ்ந்து திருட்டு மணல்  ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் எழுதுமட்டுவாள் வீதியூடாக செல்வதாகவும் இதனால் தமது கிராமத்தில் வீதிகள் இல்லாமல் போவதுடன் வீதி ஓரங்களில் மணல் அகழ்வதால் வீதிகள் சொதைவடைவதாகவும் பாரிய குன்றும் குழியிமாக காணப்படுவதாகவும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பாக உரியவர்கள் உரிய கவனமெடுத்து திருட்டு மணல் அகழ்வை தடுப்பதுடன் தமது கிராம சூழலையும் பாதுகாக்க உதவுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்