மண்சரிவு அபாயம் – சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்

மழையுடனான காலநிலையினால் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் மடுல்சீமை தோட்டப் பகுதிக்கு உட்பட்ட கல்உல்லவத்த, டுமொ பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 46 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேர் இன்று (திங்கட்கிழமை) அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வெளியெற்றப்பட்ட மக்கள் கல்உல்லவத்த தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 98 பெண்கள் இருப்பதாகவும் அவர்களில் இருவர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.