யாழ்ப்பாணத்தில் நீரில் மூழ்கும் பல பிரதேசங்கள்…..!

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் யாழ்.நகரை அண்டியிருக்கும் நாவாந்துறை, மீ னாட்சிபுரம், கொழும்புத்துறை போன்ற இடங்களில் வெள்ளநீா் புகுந்துள்ளதால் மக்கள் பொிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா்.குறித்த பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்துள்ளது. மக்கள் தமது குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறாதபோதும் வெள்ளத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனா். எனினும் தமக்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை.
என மக்கள் கூறுகின்றனா். இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி மேயா் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ள நீரை வெளியேற்றுவது குறித்து ஆராய்ந்துள்ளாா்.