பிரஜைகள் குழுக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வவுனியாவில் இடம் பெற்றது….!

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க்த்தின் ஏற்பாட்டில் L S T நிறுவனத்தினரால் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு,மன்னார் பிரஜைகள் குழு,முசலி பிரஜைகள் குழு ஆகியவர்களுக்கான இரண்டு நாள் உள்ளூராட்சி மன்றங்களில் எவ்வாறு ஒவ்வொரு பிரஜைகளும் பங்காற்றுதல் எனும் தொனிப்பொருளில் பயிற்சி வகுப்பு வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம் பெற்றது நேற்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமான வதிவிட பயிற்சி நெறி இன்று பிற்பகல் 2 மணிவரை இடம் பெற்றது.

 

L S T நிறுவன திரு சேனாரத்ன தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வளவாளரா நவரத்ன கென் நாயக்க ஆகலந்து கொண்டார் சிறப்பு அதிதிகளாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஜன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா விஜயழகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .இதில் மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகள் முசலி பிரஜைகள் குழு பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு பிரதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பம் மற்றம் உத்தியோகத்தர்கள்.மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குறூஸ் உட்பட 47 பேர்கள் கலந்து கொண்டனர்.