பாதுகாப்பான நஞ்சற்ற உணவு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ..!

நஞ்சற்ற உணவின் நன்மைகளும் நஞ்சுள்ள உணவுகளின் பாதிப்புக்களும் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மருதனார்மடம் விவசாய கல்லூரி மண்டபத்தில் 29/11/2019 அன்று காலை 9:00 மணியளவில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ் மாவட்ட இணைப்பாளர் என் இன்பம் தலமையில் இறைவணக்கத்துடன் இடம் பெற்றது.இதில் வளவாளராக விவசாய போதனாச்சாரியார் எஸ் கந்தசாமி கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார் இந்திகழ்விற்க்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க இளைஞர்கள் குழு, உறுப்பினர்கள் யாழ் மாவட்ட பூந்தளிர் பெண்கள் குழு உறுப்பினர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க செயற்பாட்டாளர்கள் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ் மாவட்ட தலைவர் இ.முரளீதரன்  உட்பட நாற்பதுபேர்வரை கலந்து கொண்டனர்