பழி­வாங்­கல்கள் வேண்டாம் என்­கிறார் சஜித்: தூத­ரக ஊழியர் கடத்தல்

கொழும்­பி­லுள்ள  சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்தின் உத்­தி­யோ­கத்தர்  ஒருவர்  கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம்  நாட்டின் இரா­ஜ­தந்­திர வர­லாற்றில்  ஓர் கரும்­புள்­ளி­யாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ கூறி­யுள்ளார்.

ஜனா­தி­பதி  தேர்­த­லை­ய­டுத்து  முதற்­த­ட­வை­யாக  தனது மெள­னத்தைக் கலைத்த  முன்னாள் அமைச்சர்  சஜித் பிரே­ம­தாஸ,  இச்  சம்­பவம் தொடர்பில்  கவலை வெளி­யிட்­டுள்­ள­துடன்  ஜனா­தி­பதி  கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வ­தா­கவும்  தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் புதிய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­ததன் பின்னர் இடம்­பெறும் சம்­ப­வங்கள் குறித்து கண்­டனம் தெரி­வித்து வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

புதிய அர­சாங்கம் ஒன்று பொறுப்­பேற்­றதும் அவ்­வ­ர­சாங்­கத்தை விமர்­சிப்­பது நாக­ரீ­க­மற்­றது. மக்கள் ஆணையை நிறை­வேற்­று­வ­தற்கு அவர்­க­ளுக்கு காலம் வழங்க வேண்டும். இருப்­பினும்  தற்­போது இந்த அர­சாங்­கத்தின் காலத்தில் இடம்­பெற்ற, இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் சம்­ப­வங்­களை பார்த்­துக்­கொண்டு தொடர்ந்தும் மௌன­மாக இருக்க முடி­யாது.

தற்­போது இடம்­பெறும் சில சம்­ப­வங்கள் அமை­தியை சீர் குலைத்து குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளன. பொது­மக்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் பாது­காப்புத் துறையை சார்ந்த பல­ருக்கும் இந்த அர­சாங்­கத்தால் அசௌ­க­ரியம் ஏற்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

குறிப்­பாக அண்;மையில் சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தின் அதி­காரி ஒருவர் கடத்­தப்­பட்டு விசா­ர­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை சர்­வ­தேச கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. இலங்கை உலகின் ஏனைய நாடு­க­ளுடன் சிறந்த உறவை பேணி­வ­ரு­கின்­றது. சர்­வ­தேச நாடுகள் மத்­தியில் இலங்கை தொடர்பில் நன்­ம­திப்பு காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்ட விவ­காரம் இலங்­கையின் வெளி­யு­ற­வுக்­கொள்­கையில் கரும்­புள்­ளியை பதித்­துள்­ளது. இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ரீதியில் இலங்கை விமர்­ச­னத்­திற்கு உள்­ளாகி வரு­கின்­றது.

ஒழுக்­க­மான, திற­மை­யான பொலிஸ் அதி­கா­ரிகள் பல­ருக்கு எதி­ராக பழி­வாங்கும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கு இப்­போதே அழுத்தம் பிர­யோ­கிக்க ஆரம்­பித்­து­விட்­டனர். இது நாம் பெற்­றுக்­கொ­டுத்து கருத்து தெரி­விக்கும் சுதந்­திரம், தகவல் அறியும் உரிமை என்­ப­வற்­றுக்கு எதி­ரான செயற்­பா­டாகும்.

நாட்டை பாது­காத்தல்,பழி­வாங்­க­லுக்கு முற்­றுப்­புள்ளி வைத்தல், பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வது மற்றும் இலங்­கையை உல­கத்தில் உயர் நிலைக்கு உயர்த்தும் உறுதி மொழிக்கு மக்கள் வழங்­கிய ஆனைக்கு முர­ணான வகையில் இந்த அர­சாங்கம் செயற்­ப­டு­வது வருந்­தத்­தக்­கது.

கட்­சி­சா­ராத, சட்ட முறை­மையை மதிக்கும் அதி­கா­ரிகள் அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உட்­ப­டுத்தல், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்­களின் சுதந்­தி­ரத்­திற்கு அழுத்தம் கொடுத்தல் என்­பன 2015 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான காலத்தை நினை­வுப்­ப­டுத்­து­கின்­றது.

இந்­நிலை குறித்து நான் மிகவும் வருந்­து­கிறேன். இதை ஜனா­தி­ப­தியின் தனிப்­பட்ட கவ­னத்­திற்கு எடுத்து செல்­கின்றேன். இந்­நாட்டில்; அனை­வரும் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழல் இருக்க வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு சுதந்திரமான சமத்துவமிக்க நாட்டை உருவாக்குவதற்கு தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறும் பழிவாங்கும் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்