1 டிசம்பர் 2019 இன்றைய நாள் எப்படி…:

மேஷம்
வேலைக்கான நேர்காணல்களில் வெற்றி கிடைக்கும். கீழே பணிபுரிபவர்களுக்கு கட்டளையிடும் உயர்பதவி கிடைக்கும். அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.

ரிஷபம்
தெய்வ சிந்தனை அதிகரிக்கும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.

மிதுனம்
அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும். அனைவருக்கும் நல்லதே நினைக்கும் எண்ணத்தைக் கைக்கொள்வது நல்லது உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.

கன்னி
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. அனைவருடனும் சுமுகமாகப் பழகி, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் ஏளனமே மிஞ்சும்.

மகரம்
அனைத்து விஷயங்களிலும் மனத்திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும்.

கடகம்
புதியன கற்பதில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கத் திட்டமிடுவீர்கள். சுவையான உணவுகளை ருசித்து மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாய் நடக்கும்.

சிம்மம்
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புகழும் உண்டாகும்.

துலாம்
வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகளால் படுத்தவுடன் தூக்கம் வராது. தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

மீனம்
காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும்.

தனுசு
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.

விருச்சிகம்
அனைத்துக் காரியங்களிலும் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் மேல் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். ஆடைஆபரணங்கள் சேரும்.

கும்பம்
இடமாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.