இன்ப அதிர்ச்சி அளித்த மோடி. அதிர்ந்து போன கோத்தபாய….!

நேற்று இந்திய பிரதமர் மோதி அவர்களை  சந்தித்த போது, அவர் ஜனாதிபதிக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் தனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்ததாகவும்
இலங்கை இராணுவத்தில் தான் பணியாற்றிய காலத்தில் பயிற்சிநெறி ஒன்றினை இந்திய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில்  பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையே பிரதமர் மோதி அவர்கள் அன்பு நினைவாக  வழங்கினார். அப்போது அந்த பயிற்சிநேறியில் தன்னுடன் இணைந்திருந்த தற்போதைய இந்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி. கே .சிங் அவர்களும் இருந்தார்.
தற்போதைய நைஜீரிய ஜனாதிபதி அவர்களும் இந்த புகைப்படத்தில் இருப்பது இன்னொரு சிறப்பம்சம்.“உங்களிடம் இல்லாத ஒர் அரிய புகைப்படம் இது…” என்று கூறியபடி இந்த புகைப்படத்தை பிரதமர் வழங்கியபோது, தான் மெய்சிலிர்த்து வியந்தாகவும் ஜனாதிபதி தெரிவித்ததுள்ளார்