நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை-இதுவரையில் ஐவர் பலி!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையினால் மக்கள் பெரும் அவதுக்குள்ளாகியுள்ளனர்.
அந்தவகையில் வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையினால் 172 குடும்பங்களை சேர்ந்த 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், 61 குடும்பங்களை சேர்ந்த 203 பேர் பா துகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.