சுவிஸ் தூதரகம் விசேட அறிக்கை

தூதரக பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் காரில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பிலுள்ள சுவிற்சலாந்து தூதரகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , மருத்துவ காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட பணியாளர் விசாரணைகளை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.