மாவீரர் தினத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த இளைஞர்கள் கைது….!

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த இளைஞர்கள் பொகவந்தலாவை பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை டின்சின் நகரத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் துண்டுப்பிரசுரங்களை பிரதியெடுத்து அவர்கள் விநியோகம் செய்ததாககூறிய பொலிஸார் ,அவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் பலவற்றை இளஞர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கைதான இளஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.