சந்தையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபையில் இன்று தீர்மானம் ….!

மருதங்கேணி சந்தையிலிருந்து இராணுவம் வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர்
வீதி தடை அமைத்து மருதங்கேணியில் சோதனையில் ஈடுபடும் இராணிவமே இவ்வாறு மருதங்கேணி பொது சந்தை கட்டிடத்தில் தங்கியுள்ளனர். இதனால் வியாபாரிகள் சந்தைக்கு வெளியே வியாபரத்தில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண்கள் சந்தைக்கு செல்ல அச்சப் படுவதாகவும் வியாபாரம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தெஅ இராணுவத்தை வெளியேற கோரப்பட்டுள்ளது இன்று   2020 ம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச சபையின் பாதீடு தயாரித்தல் தொடர்பான விசேட அமர்வு  காலை 9:00 மணிக்கு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சபை தவிசாளர் அ.ச.அரியகுமார் தலமையில் ஆரம்பமானது. இதன்போதே இவ்வாறு தெரிவித்ததுடன்   சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் அவர்களின் விசேட பிரேரணையாக மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை விடுத்ததை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இரண்டு நிமிடங்கள் அக வணக்கம் செலுத்ப்பட்டே விசேட அமர்வு தொடர்ந்து இடம் பெற்றது.தொடர்ந்து பிரதேச சபையின் பாதீடு ஆரயப்பட்டது.தொடர்ந்து  கரையோர பாதுகாப்பின் கீழ் கடற்கரையில் எந்தவொரு மீனவரும் வாடி அமைத்தோ அல்லது வீடமைத்தோ வசிக்கவோ தொழில் செய்யவோ முடியாத நிலை காணப்படுவதாகவும் இது யாழ்ப்பாணத்திற்க்கு பொருந்தாது என்றும் இதனை நீக்குவதற்க்கு புதிய மீன்பிடி அமைச்சரை கோருவது என்கின்ற தீர்மானமும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சிறிய கரையோர மீனவர்கள் உட்பட மீனவர்களும் அவர்களுடன் உதவியாக தொழில் புரிவோரும் தென்னிலங்கை மீனர்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் மூலம் மீன் பெருக்கம் இல்லாத காரணத்தால் கடுமையாக பாதிக்க படுவதாகவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற தீர்மானமும் தனியார் மற்றும் அரச பேருந்துகளில் மதுபோதையிலும் மற்றும் துர் நடத்தைகளில் ஈடுபடுவதாகவும் இதனால் மாணவிகள் பெண்கள் முதியவர்கள் எவரும் செல்ல முடியாது உள்ளதாகவும் எனவே அவற்றை தடுப்பதற்கு சபை மூலம் உரியவர்களுடன் பேசுவது என்றும் வடமராட்சி கிழக்கிற்க்கு பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணம் சாலைகளிலிருந்து கேவில் வரை போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள் மிகமிக பழமை வாய்ந்தவை என்றும் இதனால் நாளாந்தம் இடை வெளியில் பழுதடைந்து நிற்பதாகவும் அதன் காரணமாக உரிய நேரத்திற்கு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பயணிகள் பாதிக்க பபடுவதாகவும் ஓரளவேனும் நல்ல நிலையில்  உள்ள பேரூந்துகளை சேவையில்  ஈடுபடுத்த கோருவது உட்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்நது சபை 11:30 மணியளவில் நிறைவுற்றது