பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி ரத்து ; ருவன் குணசேகர பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமனம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எனும் பதவியை ரத்து செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு இன்று தீர்மானித்துள்ளது.

இன்று மாலை கூடிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு இதற்கான  தீர்மானத்தை எடுத்துள்ளது. அதன்படி கடந்த இரு நாட்களாக  செயழிலந்திருந்த பொலிஸ் பேச்சாளர் மற்றும் பேச்சாளரின் அலுவலக பணிகள் இனி நிரந்தரமாக செயற்படாமல் போகும் நிலை ஏர்பட்டுள்ளது.

இந் நிலையில்  குறித்த பதவி நிலை ரத்து செய்யபப்டும் போதும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவை பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக தேசிய பொலிஸ் ஆணைக் குழு நியமித்துள்ளது.

அவரது அலுவலக பொலிஸ் அதிகாரிகள் வேறு பொலிஸ் நிலையங்கள், பிரிவுகளுக்கு மாற்றப்படுவர் என அறிய முடிகின்றது.

இந் நிலையில் பொலிஸ் பேச்சாளர் பதவி ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை விரைவில் சந்திக்க தீர்மனித்துள்ளது.