பொலிஸ் அதிகாரிகளை வெளிநாடு செல்லவிடாது தடுத்தமை தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயமாகும்”

பொலிஸ் அதிகாரிகள் 704 பேரை வெளிநாடு செல்லவிடாது தடுத்தமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் அல்ல. இது தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயமாகும் என தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

பொலிஸ் ஊடகப் பிரிவு ஒன்று இல்லையென்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான நடவடிக்கை எடுப்பார் .

ஜனாதிபதி  நாடு திரும்பியவுடன் உடனடியாக பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் ஒருவரை நியமிப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.