பலமணி நேர விசாரணைக்குப் பின் துஷாரா விடுவிப்பு.!

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த “வொயிஸ் டியூப்” யூ டியூப் தொலைக்காட்சியின் ஆசிரியரான துஷாரா விதாரண, பலமணி நேர விசாரணைக்குப் பின்னர், விடுவிக்கப்பட்டுள்ளார்.நிதியமைச்சின் ஊடகப் பிரிவில், அமைச்சின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அவர், சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இன்றையதினம் ஆஜராகியிருந்த நிலையில், பல மணி​நேர விசாரணைக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, “த லீடர்” “ கீ யூ டியூப்” தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சஞ்ஜய தனுஷ்கவ, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த (26) அழைக்கப்பட்டு, 8 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.