நாட்டைவிட்டு வெளியேறிய CID அதிகாரி ஐ.நா விடம் ஆவணங்களை சேர்ப்பாரா?

நாட்டைவிட்டு வெளியேறிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா கந்தப்பா, பல ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.நாட்டின் முக்கியமான அரசியல்வாதி மற்றும் பெருமளவு பாதுகாப்பு தரப்பினர் குறித்த விபரங்களை அவர் எடுத்து சென்று விட்டார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனீவாலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் ஒப்படைக்க அவை எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென பாதுகாப்பு தரப்பு நம்புவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.2015ம் ஆண்டிற்கு முன்னர் இடம்பெற்ற பாரதூரமான சம்பவங்கள் பலவற்றை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை நடத்தியது. இதன்போது, பிரதான விசாரணை அதிகாரியாக இருந்தவர் நிஷாந்த சில்வா.இராணுவம், கடற்படை, புலனாய்வுத்துறை ஆகியவற்றை சேர்ந்த 1,500 பேர் வரையில் அந்த சமயத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை செய்யப்பட்டதாகவும், அவர்களின் கைரேகை மற்றும் இரகசிய ஆவணங்கள் அனைத்தும் நிஷாந்த சில்வாவினால் எடுத்து செல்லப்பட்டு விட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களும் எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.