ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமையவே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த சமிலா சத்துரங்கனி ஜயவர்தன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு 6 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண் சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றையும் நடத்திச் சென்றுள்ளார் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.