ஆழியவளை சீசீதக.பாடசாலை பரிசளிப்பு விழா சிறப்பாக இடம் பெற்றது.!

வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு க.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்களை வீதியிலிருந்து மலர் மாலை அணிவித்து பேண்ட் இசை முழங்க மைதானத்தின் அரங்கு வரை அழைத்து வந்து அங்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

மங்கள விளக்குகளை பிரதம விருந்தினரான சங்கரப்பிள்ளை திரவியராஜா, திருமதி சரஸ்வதி திரவிய ராஜா திரவியராஜா துவாரகன். சித்த வைத்திய கலாநிதி சிவனேசன், பாடசாலை அதிபர் க பாஸ்கரன், சமாதான நீதவான் திரு ஜெயபால கிருஷ்ணன், பாடசாலை அபிவிருத்திச் சபைசெயலாளர் கே பாலகுமார் பழைய மாணவர் சங்க தலைவர் கே அரவிந்தன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் வரவேற்பு நடனம் என்பனவும் இடம்பெற்றது, வரவேற்பு உரையினை பாடசாலை ஆசிரியர் திரு அஜந்தகுமார் நிகழ்த்தியதைத் தொடர்ந்து தலைமை உரையினையும் நோக்கங்களையும் பாடசாலை அதிபர் கே பாஸ்கரன் நிகழ்த்தினார், தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் நடனம் பாடல் கவிதைஉட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதை தொடர்ந்து கருத்துரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் சங்கரப்பிள்ளை திரவியராசா உட்பட பலர் நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து பரிசில்களை பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்த. ஓய்வு பெற்ற மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி சங்கரப்பிள்ளை திரவியராசா மற்றும் திருமதி சரஸ்வதி திரவியராசா சமாதான நீதவான் பாலகிருஷ்ணன், சித்த வைத்திய கலாநிதி சிவனேசன் உட்பட பலர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.