மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இன்று மக்கள் தயார்.துயிலும் இல்லங்களிலும் ஏற்பாடுகள் பூர்த்தி…!

இன்று மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராடி, தம்மை அர்ப்பணித்த. அறுபதாயிரத்திற்க்கு அதிகமான போராளிகளை உலகத்தமிழினம் இன்று நெஞ்சுருக நினைவுகொள்ளும் நாள்.

அரசியல், வாழ்வு உரிமைக்காக அகிம்சை வழியில் ஆரம்பித்த போராட்டம், பின்னர் ஆயுத வழிக்கு திரும்பியது. அந்த போராட்ட வடிவத்தின் தலைமகனாக விடுதலைப்புலிகள் அமைப்பு உருப்பெற்றது. எந்த சமரசத்திற்கும் இடமில்லாமல், கொண்ட கொள்கையில் உறுதியாக போராடிய அந்த இயகத்தில் இருந்து, தமிழ் மக்களின் விடிவிற்காக உயிர்நீத்த நாற்பதாயிரத்திற்கும் அதிகமானவர்களை இன்றைய நாளில் உலகத்தமிழினம் நினைவுகூர்கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் களப்பலியான லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்பர் 27ம் திகதியே ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினமாக அனுட்டிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு விடுதலைப்புலிகள் முதன்முதலில் மாவீரர்தினத்தை அனுட்டிக்கத் தொடங்கினர்.
சங்கர் உயிர்நீத்த நேரமான மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடடேற்றப்பட்டு, ஒவ்வொரு துயிலமில்லத்திலும் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்படுவார்கள்.
வடக்கு, கிழக்கில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டு விட்டபோதும், துயிலுமில்லங்கள் இருந்த இடங்கள் சிரமதானம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இன்று இடம்பெறும்.